கொரோனா பரவல் - இலங்கை 99 ஆம் இடத்தில்...!
கொரோனா வைரஸ் தாக்க நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் நேற்று முன்தினம் 100 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இலங்கை, நேற்று 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
நேற்றைய தினத்தில் 387 பேருக்கு நாட்டில்கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
371 மரணங்கள் பின்லாந்தில் சம்பவித்துள்ளன.
101 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள மடகஸ்காரில் 17ஆயிரத்து 310 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 250 ஆக பதிவாகியுள்ளது.
கொவிட்-19 தாக்கநிலைமை தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்திற்குள் பதிவாகியுள்ளநிலையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைந்தளவில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களுடன் 82 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள சிங்கப்பூரில் இதுவரையில் 28 மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன.
இதற்கு அடுத்ததாக இலங்கையில் 61 இறப்புகள் சம்பவித்துள்ளன.<br /><br />ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சர்வதேச நாடுகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 53 இலட்சத்து 8 ஆயிரதது 798 ஆக ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 3 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது
இதேநேரம் 3 கோடியே 84 இலட்சத்து 5 ஆயிரத்து 573 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.