பிற்போடப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பாக மேல்நீதிமன்றம் விசேட தீர்மானம்!

பிற்போடப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பாக மேல்நீதிமன்றம் விசேட தீர்மானம்!

கொரோனா தொற்றினால் பிற்போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு புதிய திகதிகளை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் பிற்போடப்பட்ட வழக்குகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்குகளுக்கு புதிய திகதிகளை வழங்குமாறு நீதிபதிகளினால் மேல்நிதிமன்ற பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வழக்குகளின் புதிய திகதிகள் எதிர்வரும் நாட்களில் நீதிமன்ற வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.