5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளைப் பெற்ற 15 மாணவர்கள்- முழுமையான விபரங்கள் இதோ..!
நேற்றைய தினம் வெளியாகிய 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் படி, இந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளான 200 புள்ளிகளை 10 மாணவர்கள் பெற்றுள்ள அதேநேரம், 15 மாணவர்கள் புள்ளிகள் எதனையும் பெறவில்லை.
பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இந்த தகவலை வழங்கினார்.
மருதானை சாஹிரா கல்லூரியின் பர்சான் மொஹமட், காலி சங்கமித்தை மகளிர் வித்தியாலயத்தின் சியத்தி விதும்ஷா, இங்கிரிய சுமணஜோதி வித்தியாலயத்தின் தெவ்லி யசஸ்மி, எஹலியகொடை ஆரம்ப பாடசாலையின் சேனுதி தம்சரா, எம்பிலிப்பிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தின் தொவிந்து சிரந்தித், அமர், திம்புலாகலை சிறிபுற வித்தியாலயத்தின் தேனுஜா மனுமித்தா ஆகிய மாணவர்கள் இவ்வாறு புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையி;ல் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரதிபரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.