
உடைப்பெடுத்த ஊற்றுக்குளம்- நேரில் சென்ற அதிகாரிகள்!
அண்மையில் உடைப்பெடுத்த வவுனியா நெடுங்கேணி ஊற்றுக்குளத்தின் சீரமைப்பு பணிகளை மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் பல நாட்களாக பெய்த கனமழையால் வவுனியா வடக்கின் ஊற்றுக்குளம் முதலைப்பாளி காரணமாக உடைப்பெடுத்திருந்தது.
இந்நிலையில் பழுதடைந்த குளக்கட்டினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக இராணுவத்தின் உதவியுடன் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குளத்தின் புனரமைப்பு பணிகளை வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.