
ஸ்ரீலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண்களுக்கு கிடைத்த உயர்பதவி!
ஸ்ரீலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை ஸ்ரீலங்கா விமானப்படையின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
பெண் விமானிகளாக ஏடிபிஎல் குணரத்தே மற்றும் ஆர்.டி.வீரவர்தனா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன ஆகியோர் முன்னிலையில் இவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இன்று நடைபெற்ற 61ஆவது அதிகாரிகளின் கேடட் கமிஷனிங் மற்றும் விங்ஸ் அணிவகுப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போதே இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறிவித்துள்ளது.