கொரோனா தொற்று : முப்பதாயிரம் பேர் சுய தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்று : முப்பதாயிரம் பேர் சுய தனிமைப்படுத்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் தாக்கத்தை கருத்திற் கொண்டு, 30 ஆயிரம் பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில், மூவாயிரத்து 168 பேர் தொடர்ந்தும் தனிமமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கட்டாரிலிருந்து 12பேரும், எத்தியோப்பியாவில் இருந்து 78 பேரும் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் லாஹுரிலிருந்து ஐந்து பேரும், இந்தியாவின் மும்பையிலிருந்து 22 பேரும் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் அனைவரும் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்காக, நாட்டில் நேற்றைய தினம் 11 ஆயிரத்து 130 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனாத் தொற்றைத் தடுப்பதறகான தேசிய செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.