நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.