
சுற்றுலாத்துறை சார்ந்த வாகன சாரதிகளுக்கு ஓர் நற்செய்தி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள துற்றுலாத்துறை சார்ந்த வாகன சாரதிகளுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக தகைமையுடைய மற்றும் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் குறித்த கொடுப்பனவை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்கி முடிக்குமாறு குறித்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.