
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா..!
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிக்குழாமின் பணியாளர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்தவர்.
அவரின் சகோதரர் ஒருவருக்கு ஏற்கனவே தொற்றுறுதி செய்யப்பட்டிருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் பி.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அந்த வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14 பணிக்குழாமினருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 20 சிறார்களுக்கும் 12 தாய்மார்களுக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அண்மையில் தகவல் வெளியானது.