சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில்..!

சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் வைரஸ் தாக்க நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய நாளின் நிலவரப்படி இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 100ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள மடகஸ்காரில் 17 ஆயிரத்து 310 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை சர்வதேச நாடுகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 48 இலட்சத்து 718 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 இலடசத்து 3 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் 3 கோடியே 81 இலட்சத்து 22 ஆயிரத்து 776 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.