முல்லேரியா வைத்தியசாலை PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தம்

முல்லேரியா வைத்தியசாலை PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தம்

முல்லேரியா வைத்தியசாலையில் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முல்லேரியா வைத்தியசாலையில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக புதிய தானியங்கி சிகிச்சை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதால் PCR பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட PCR பரிசோதனை தொகுதியை விநியோகித்த சீன நிறுவனத்தினால் பரிசளிக்கப்பட்டுள்ளதாக முல்லேரியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 31 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த சீன நிபுணர்கள் இருவரின் தலைமையில் குறித்த தானியங்கி சிகிச்சை இயந்திரம் நிறுவப்படுகின்றது.

இதற்கிணங்க, புதிய தொகுதி நிறுவப்பட்ட பின்னர் நாளாந்த PCR பரிசோதனைகளை இரு மடங்காக அதிகரிக்க முடியும் என வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, நேற்று மாத்திரம் நாட்டில் 13,671 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.