பிற்போடப்பட்ட மற்றுமொரு பரீட்சை..!

பிற்போடப்பட்ட மற்றுமொரு பரீட்சை..!

கொவிட் பரவலின் அச்சம் காரணமாக இவ்வருடம் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெற இருந்த தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர் சான்றிதழுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர்கள் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர் இம்முறை இந்த பரீட்சைக்காகத் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு முழுவதிலுமுள்ள 22 மாவட்டங்களில் நடைபெறுகின்ற இந்த பரீட்சைகள் நடைபெறும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.