முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்! ஆபத்தான நிலையில் இளைஞர்

முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்! ஆபத்தான நிலையில் இளைஞர்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் இரவு கூமாங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.