யாசகத்தில் ஈடுபடுவோர் தொடர்பாக பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

யாசகத்தில் ஈடுபடுவோர் தொடர்பாக பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு நகரிலுள்ள வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு நகரிலுள்ள யாசகர்கள், யாசகத்தை ஒரு தொழிலாக செய்து வருவதாகவும், அவர்கள் வேறொருவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கொழும்பு நகரில் யாசகர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான நிலையில், யாசகர்களின் ஊடாக கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்தே, யாசகர்களை கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்படும் யாசகர்களுக்கு எதிராக சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.