வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் பலி

வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் பலி

ரோமானியாவிலுள்ள கொவிட்-19 வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ஏனைய அறைகளுக்கும் தீ பரவியதோடு வைத்தியர் ஒருவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களது நிலை கவலைகிடமாக உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த வைத்தியசாலையில் இருந்த ஏனைய கொரோனா நோயாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரோமானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரோமானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 9 ஆயிரத்து 460 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 129 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய ரோமானியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளதோடு 8 ஆயிரத்து 813 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர்.