நாடு முழுவதும் சோதனை செய்ய திட்டம்

நாடு முழுவதும் சோதனை செய்ய திட்டம்

முறையான சுகாதார பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக நாடு முழுவதும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இந்த முடிவு அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 05 பேருந்துகளின் வீதி அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.