பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்

கொவிட் 19 பரவலால் நாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மக்கள் கடல் உணவுகளை கொள்வனவு செய்யாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கடற்றொழில் உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிரம்பல் செய்யப்படும் கடல் உணவுகளில் 70 சதவீத்தை அவர்கள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரை எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அதிக வெப்பநிலையுடனான மீன்களின் ஊடாக கொவிட் 19 வைரஸ் பரவாது என சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதனை நன்றாக கழுவியதன் பின்னர் சமைத்து உண்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மீன்களை கொள்வனவு செய்யும் போது, அதனை விநியோகிக்கின்றவரும், கொள்வனவு செய்பவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.