
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுநரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று (13) இடம்பெற்றது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொவிட் 19 வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் மத்திய அரசு, கிழக்கு மாகாண சபை, விசேட திட்டங்கள் உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சாதக பாதகங்கள் பற்றியும், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தொடர்வதற்கான நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.