தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள துறைமுக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள துறைமுக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு துறைமுகத்தின் சுமார் 200 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் கொழும்பு துறைமுகத்தில் 61 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரால் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்த குழுவே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, 106 ஊழியர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து இதுவரையில் வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.