மேல்மாகாண பயணக்கட்டுபாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு!

மேல்மாகாண பயணக்கட்டுபாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு!

தனிமைப்படுத்தல் பகுதிகள் மற்றும் மேல் மாகாண பயண கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதனை அடுத்தே முடிவு அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டபடி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.