வெல்லாவெளி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

வெல்லாவெளி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் அம்பிளாந்துறை - வெல்லாவெளி வீதியில் தாமரைப்பூசந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.

உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூண் ஒன்றில் மோதி இன்று முற்பகல் இந்த அர்த்தம்இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மட்டக்களப்பு - மண்டூர் பலாச்சோலையை சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

உந்துருளியில் மேலும் ஒருவர் பயணித்துள்ளதுடன்; விபத்தின் பின்னர் அவரை காணவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.