
தனிமைப்படுத்தப்பட்ட மேலும் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் (காணொளி)
பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் காலி- ஊரகஸ்மங்சந்திய பகுதியில் உள்ள 4 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வெளியாகும் வரையில் ஊரகஸ்மங்சந்திய வடக்கு, ஊரகஸ்மங்சந்திய தெற்கு, யட்டகல மற்றும் வல்இங்குருகொடிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.