போலி அமெரிக்க டொலர்களை அச்சிட்ட கும்பல் தொடர்பில் வெளியான தகவல்

போலி அமெரிக்க டொலர்களை அச்சிட்ட கும்பல் தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்க டொலர்களைப் போன்று போலி நாணயத்தாள்களை அச்சடித்து இந்நாட்டு பணக்காரர்களிடம் அவற்றை வழங்கி, அவற்றை இலங்கை நாணயத்திற்கு மாற்றிவந்த குழுவொன்றின் மோசடி செயல் தொடர்பிலான செய்தியொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் நேற்றைய தினம் சாலியபுர இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காவற்துறை அதிகாரி, வர்த்தகர்கள் போன்று தங்களை காட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போலியான முறையில் அச்சிடப்பட்ட 753 நாணயத்தாள்களையும் அனுராதபுரம் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.