
கொழும்பில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு நகர எல்லைக்குள் அண்மையில் ஆங்காங்கே நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய 5 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளதாக அரச வைத்திள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில், தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் PCR பரிசோதனைகளை நடத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி இலங்கையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட PCR 4 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பு நகர எல்லைக்குள் அண்மையில் ஆங்காங்கே நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய 5 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
PCR பரிசோதனைகளின் அளவுக்கு அமையவே தற்போது அதிகமான பாதிப்புள்ள கொழும்பு நகரம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை வெளியிட முடியும். PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகளவில் மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. எனினும் அப்படியான நிலைமையை காண முடியவில்லை எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.