
வெளியிடப்பட்ட போலித்தகவல்கள்! களமிறக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவினர்
வீதியில் திடீர் திடீரென விழுந்து உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று என்று போலித் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளதாவது,
வீதியில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று காரணம் என கூறி சமூக வலைத் தளங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் குறித்து சி.ஐ.டியினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இவ்வாறான போலியான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.