நாட்டின் அனைத்து ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன!

நாட்டின் அனைத்து ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன!

நாட்டின் அனைத்து ரயில்சேவைகளும் இன்றும் நாளையும்   ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச விடுமுறை தினங்களாக அமைந்துள்ளதன் காரணமாக   இந்தத்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல், அனைத்து அலுவலக ரயில் சேவைகள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் ஆகியன வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கான அனைத்து பஸ் சேவைகளும்  இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.