கொழும்பு நகரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு நகரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொழும்பு நகரம் அபாயநிலையினை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம்  சுமார்  ஆயிரத்து  83 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு நகரம்  ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம்  தினசரி 200க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுடன் அடையாளங் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.