போலியான சரீரங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர் கைது

போலியான சரீரங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர் கைது

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான சரீரங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.