
கொரோனாவை தடுக்கும் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை
பல சிறைச்சாலைகளில் பரவிவரும் கொவிட்- 19 தொற்றை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கொவிட் 19 தடுக்கும் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 180 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தொடர்ந்தும் கொவிட் 19 தொற்று சிறைச்சாலைகளில் பரவாமல் தடுப்பதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது
கொழும்பு, போகம்பர, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.