
இன்றைய தீபாவளி நன்நாளில் அனைவரும் வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் கோரிக்கை
ஆன்மீக ஞான ஒளியினை இறைவழிபாட்டில் பெற்றுக்கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாளாக இன்றைய தீபாவளி பண்டிகை காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் அனைவரும் வழிபாடுகளில் ஈடுப்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடானது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுப்பட்டு, மீண்டும் அனைத்து துறைகளிலும் எழுச்சிப்பெறுவதற்கு இன்றைய நாள் இறையருள் மிக்கதாக அமைய வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரார்தனைகளை வெளியிட்டுள்ளார்.