
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 07 பேர் இன்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் (12) 15 பேர் முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் மற்றும் விமானப் படையினர் இணைந்து முகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் பயணக்கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.