பொய் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் விசாரணை

பொய் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் விசாரணை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் கொவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்கு விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (13) பிறபகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நாட்டில்  கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே நபரொருவர் வீதியில் உயிரிழந்த கிடந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.