இலங்கையில் வேகமாக பரவிவரும் எலி காய்ச்சல்

இலங்கையில் வேகமாக பரவிவரும் எலி காய்ச்சல்

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எலி காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைகுறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலி காய்ச்சல் காரணமாக நாட்டில் 4 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் 50 மரணங்கள் பதிவாகியிருந்தன.

எனினும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 6 ஆயிரத்து900 பேர் எலி காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.