வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்தில் 30ஆயிரத்துக்கும் அதிகமான கொவிட் 19 நோயாளர்கள் இருப்பதாக வெளியான தகவல், பெருப்பிக்கப்பட்டு வெளியாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது அதிகளவான பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட 8000க்கும் அதிகமான பரிசோதனைகளில் 200க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

உண்மையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த எண்ணிக்கை வெளிப்படுத்தப்படுமே தவிர மறைக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் அடுத்தவாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.