தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளுக்காக இழப்பீடு வழங்க வேண்டும்..!
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளுக்காக மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தேசிய மீனவர் பேரவையின் துணைத் தலைவர் ஆர்.வி. குமரவேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த மீன்பிடி படகுகளை அழிக்க இலங்கையில் நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டுள்ளது
எனவே, தமிழக அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினை குறித்து கவனம் கொண்டு தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீட்டுத்தர வேண்டும்.
அல்லது மீன்பிடி படகின் மதிப்புக்கு இணையான இழப்பீட்டுத் தொகையை கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் இந்திய தேசிய மீனவர் பேரவை கோரியுள்ளது.