பேஸ்புக் நிறுவனம் சரியாக இயங்கி இருந்தால் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்..!

பேஸ்புக் நிறுவனம் சரியாக இயங்கி இருந்தால் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்..!

பேஸ்புக் நிறுவனம் சரியாக இயங்கி இருந்தால் இலங்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என அந்த நிறுவனத்தின் முன்னாள் உயர்நிலை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சியில் இருக்கின்ற ஆம் ஆத்மி கட்சியின் விசேட ஆணைக்குழு ஒன்றில் கருத்தளித்த பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் உயர்நிலை அதிகாரியான மார்க் எஸ் லக்கி இதனைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனமானது, வெறுப்புணர்வு பேச்சுக்கள் மற்றும் மதவாத பதிவுகளுக்கு எதிரான பொறிமுறைகளை உரிய முறையில் அமுல் ஆக்கியிருக்கவில்லை.

இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு வன்முறைகள் பரவுவதற்கு சமூகவலைதளம் ஏதுவாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.