கொரோனா மரணம் தொடர்பில் போலியான செய்திகளை பதிவிட்டோர் மீதான விசாரணைகள் ஆரம்பம்

கொரோனா மரணம் தொடர்பில் போலியான செய்திகளை பதிவிட்டோர் மீதான விசாரணைகள் ஆரம்பம்

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான சரீரங்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.