மரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவு

மரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவு

நாட்டிலுள்ள சில பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளது.

நாளாந்தம் 40 இலட்சம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட மரக்கறிகள் சந்தைக்கு கிடைப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

COVID – 19 தொற்று காரணமாக மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனபடிப்படையில், லீக்ஸ் – 45 ரூபா முதல் 50 ரூபா வரையிலும் ஒரு கிலோ கரட் – 120 ரூபா முதல் 125 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.