முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை

p>தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பினர் இந்த படங்களை துஸ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியங்கள் உண்டு என இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் (ITSSL) தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சிலர் தங்களது படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

முகநூல் ஊடாக ஐந்து வித்தியாசமான படங்களை வெளியிடும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது புகைப்படங்களை பிரசுரிக்கும் நபர்கள் பிரைவெசி செட்டிங்கில் (privacy settings) நண்பர்களுக்கு மட்டும் என்பதனை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

பப்லிக் ( ‘public’) என்ற அடிப்படையில் இந்த படங்களை பகிர்வதன் மூலம் சைபர் குற்றவாளிகள் இந்த படங்களை பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த படங்களை பயன்படுத்தி வேறும் சமூக ஊடக வலையமைப்புக்களில் புதிய போலியான ப்ரோபைல்கள் (profiles) உருவாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் ட்ரெண்ட் செய்யப்படும் எந்தவொரு சவால் என்றாலும் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் கோரியுள்ளது.