
முஸ்லிம்களின் சரீரத்தை தகனம் செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை..!
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை தகனம் செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கோவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரத்தை தகனம் செய்யும் நடைமுறையை இலங்கையின் சுகாதார அமைச்சு பின்பற்றுகிறது.
எனினும் சரீரத்தை புதைப்பதால் நோய் பரவல் ஏற்படும் என்ற எந்தவொரு ஆதாரமும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்படவில்லை.
எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மீள் பரீசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.