கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகமயமாக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் மூன்றாம் கட்டத்திலேயே  உள்ளது. ஆகையினால் அதனை கட்டுப்படுத்துவது கடினம் அல்ல.

மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்றுநோயியல் பிரிவு ஆகியன, வைரஸ் சமூகமயமாக்கப்படவில்லை என்றே கூறுகின்றன.

அந்தவகையில்,  மினுவாங்கொட மற்றும் பேலிய கொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கொத்தணியில் முதலாவது கட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.