தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கம் தொடர்பாக இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது தொடர்பான தீர்மானம் நாளை (சனிக்கிழமை) எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஊரடங்கு உத்தரவினை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பஹா மாவட்டத்திலும் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது.
இந்நிலையிலேயே குறித்த பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை, நீக்குவது தொடர்பான தீர்மானத்தை நாளை எடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.