வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி...!

வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி...!

காலி - ஹபராதுவ போகஹகொட - கபரகள பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய தாய் ஓருவர் தனது மகள் மற்றும் மகனுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டு இருந்த நிலையில், பாரவூர்தியுடன் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூத்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.