மேல் மாகாணத்தில் 17,708 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..!

மேல் மாகாணத்தில் 17,708 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..!

மேல் மாகாணத்தில் 17,708 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்தார்.

குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளவர்களை கண்காணிப்பதற்காக விஷேட காவல்துறை குழுக்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 காவற்துறை அதிகாரப்பிரதேசத்திலும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இன்றும் ஆளில்லா விமானங்களும், உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.