
ஓய்வு பெற்ற சேவையாளர்கள் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்...!
கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஓய்வு பெற்ற சேவையாளர்கள் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தகுதியுடைய பல நிறுவனங்களினது சேவையை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் பெரும்பாலான சேவையாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலேயே வசிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய தரப்பினர் கொழும்பு நகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேங்களில் வசித்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வது அச்சுறுத்தலாக அமையும் என துறைமுக அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.