
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12000 ஐ கடந்துள்ளது...!
நேற்று இரவு மேலும் 92 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில், இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 369 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியது.
அவர்கள் அனைவரும் நோயாளர்களின் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் திவுலப்பிட்டிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தை ஆகிய இரட்டைக் கொத்தணிகளை மையப்படுத்தி அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 227ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் 5 ஆயிரத்து 18 கொவிட் 19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதேவேளை, நாட்டில் கொவிட் -19 தொற்றிலிருந்து மேலும் 470 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரைக்காலமும் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.