குஞ்சுக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குஞ்சுக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து மகிழுர்ந்து ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.