
வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 51 பேர் நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 51 பேர் இன்று (12) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கத்தாரிலிருந்து 31 பேரும் ஓமானிலிருந்து 20 பேரும் இன்று நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 40 ஆயிரம் பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.