வனப்பகுதிகள் அரசாங்கத்திடம் காணப்படுவதே சிறந்ததாகும்..!

வனப்பகுதிகள் அரசாங்கத்திடம் காணப்படுவதே சிறந்ததாகும்..!

அரசாங்கத்திற்குரிய பயன்படுத்தப்படாத வனப்பகுதியை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பொறுப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த வனப்பகுதிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் வசம் காணப்படுமாயின் இயற்கைக்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாது எனவும் வனஜீவராசிகளும் பாதுகாக்கப்படும் என கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையை தாமும் வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.