நாடாளுமன்றில் ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பில் நிலைப்பாட்டு அறிக்கையை முன்வைத்த நிதியமைச்சர்
இந்த ஆண்டின் அரசாங்கத்தின் வரவு - செலவுகள் குறித்து ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பாக, நிதியமைச்சர் என்ற வகையில் தமது நிலைப்பாட்டு அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்வைத்தார்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒதுக்கங்கள் பற்றிய அறிக்கையை பிரதமர் நாடாளுமன்றில் வாசித்தார்.
இதன்படி தற்போது அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு சட்ட மூலம் குறித்த விவாதம் இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 5 மணி அளவில் இதுமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது
எனினும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் கருதி இன்றைய விவாதத்தின் போது செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.